ADVERTISEMENT

காலியிடங்களை வாடகைக்கு விடுவதாக பி.எஸ்.என்.எல் அறிவிப்பு!

06:02 PM Nov 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


திருச்சி மத்திய தலைமைத் தபால் அலுவலகம் அருகில், ஏழு மாடிக் கட்டிடத்துடன் பி.எஸ்.என்.எல் அலுவலகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என 1,200 பேர் பணியாற்றி வந்தனர்.

ADVERTISEMENT

இதில் ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் விருப்ப ஓய்வு போன்ற காரணங்களால் 600 அலுவலர்கள், பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஏழு மாடி கொண்ட கட்டிடத்தில் நான்கு மாடிகள் மட்டுமே பி.எஸ்.என்.எல் அலுவலகம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள மூன்று மாடிகளை வாடகைக்கு விட பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது, என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகக் கட்டிடத்தில் காலி இடத்தை வாடகைக்கு விடுவதை வரவேற்கலாம். அதேசமயம் தனியாக அரசியல் சார்ந்த பணிகளுக்கு, பி.எஸ்.என்.எல் அலுவலகக் கட்டிடத்தை வாடகைக்கு விடுவது சரியானதாக இருக்காது; ஊழல்களுக்கு வாய்ப்பளித்து விடும்.


மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் வாடகைக்கு விட வேண்டும். என்று பி.எஸ்.என்.எல் நிறுவனத் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT