The BSNL employee in Trichy had gone in a fantastic manner

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மதுரை மாவட்டம் கோவலன் நகரை சேர்ந்த பாலாஜி (வயது 47) என்பவர் தங்கி இருந்தார். இவர் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் தங்கி உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தங்கம் விடுதியில் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு அறையில் தூங்கியவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பாலாஜி படுத்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி மேலாளர் உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் பால்ராஜ் அதிக கடன் வாங்கிய காரணத்தால் விரக்தியில் இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக சரியாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் காணப்பட்டார்.

மேலும் அவரது அறையில் அவர் படுத்திருந்த படுக்கைக்கு அருகில் மது பாட்டில் கிடந்தது. எனவே இரவு தூங்கும் போது பாலாஜி மது குடித்துவிட்டு தூங்கிய நிலையில் இறந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் பாலாஜி எப்படி இறந்தார் என்பது குறித்து தெளிவாக தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisment