Advertisment

சம்பளம் வழங்காத பி.எஸ்.என்.எல். நிர்வாகம்! ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

BSNL

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வாயிலில் இன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 285 பேர் தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள், அலுவலக பராமரிப்பு, கழிவறை சுத்தம் செய்தல், குடிதண்ணீர் எடுத்து வைத்தல், அலுவலக வாயில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகள் தரப்பட்டு, ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் வாங்கும் சம்பளமானது ரூ.6000, ரூ.7000 அளவில்தான். இந்தச் சம்பளமும் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை.

Advertisment

மிகக்குறைந்த சம்பளம் வாங்கும் இவர்களுக்கு சம்பளம் தராததால், கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இப்போது கடன் தர யாரும் முன்வராத நிலையில், வெகு சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனாலேயே, காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இவர்களின் போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் ஆதரவு தருகிறது.

தமிழ்நாடு மாநில பி.எஸ்.என்.எல். நிர்வாகம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை தாமதிக்காமல் வழங்கவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

BSNL strike
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe