Brutally shot five times; Confusion at kangeyam

திருப்பூரில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ளது எல்லப்பாளையம் கிராமம். அந்த பகுதியில் விவசாயம் செய்து வருபவர் பழனிசாமி (70). இவருடைய மகள் அம்பிகாவை ராஜேஷ் குமார் என்பவருக்கு பழனிசாமி திருமணம் செய்து வைத்திருந்தார்.

அம்பிகாவின் கணவர் ராஜேஷ்குமார் ஹாலோப்ரிக்ஸ்தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் பழனிசாமியை ராஜேஷ் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுக்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட ராஜ்குமார் காங்கேய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகனே மாமனாரை சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.