Advertisment

மொபைல் செயலியில் ஆட்டோ புக் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்-திருப்பூரில் பரபரப்பு!

The brutality that happened to the woman who did the auto booking in mobile activity-Stir in Tirupur!

Advertisment

கோயம்புத்தூரில் 'ரேபிடோ' மொபைல் செயலில் ஆட்டோ புக் செய்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் திருப்பூரிலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து 'ரேபிடோ' என்ற மொபைல் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்து வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது அங்கு புக் செய்யப்பட்ட ஆட்டோ வந்தது. அதில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். ஆட்டோவை நிறுத்த கூறியும் ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றதால்வெளியே எகிறி குதித்து கூச்சலிட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பெண்ணின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் அளித்த புகார் பேரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உக்கடத்தைச் சேர்ந்த முகமது சாதிக் என்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.

police incident auto thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe