Advertisment

சவுக்கு தோப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது

 The brutality of the girl in the whipping grove; Two arrested

தஞ்சாவூரில் சவுக்கு காட்டுக்குள் காதல் என நம்ப வைத்து அழைத்துச் சென்ற நபர் நண்பருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை நம்ப வைத்து சவுக்குத் தோப்புக்குள் அழைத்துச் சென்ற நிலையில் அரவிந்த், சரண் என்று இருவரும் சேர்ந்து அச் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்க முயன்றுள்ளனர். இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து சிறுமியை மீட்டனர்.

Advertisment

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சரண், அரவிந்த் ஆகிய இருவரை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார்கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe