The brutality of beating a fellow worker to death; Police searching for the body

Advertisment

சென்னை பெருங்குடியில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் சக தொழிலாளியே கொலையில் ஈடுபட்டது தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் கொலையில் ஈடுபட்ட ராஜா என்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெருங்குடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டித் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளி ஒருவர் வெட்டி கொலை செய்து புதைத்ததாக தகவல் வெளியானது. இது குறித்த விசாரணையில் ராஜா என்ற தொழிலாளியை போலீசார் தேடி வந்தனர். மதுபோதையில் இந்த கொலைச் சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிய வர கோவையில் பதுங்கி இருந்த சக தொழிலாளி ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட முத்தமிழ் என்ற தொழிலாளியின் உடல் எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சக தொழிலாளியை கொலை செய்து புதைத்த இடத்தை ராஜா அடையாளம் காட்டினார். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடலை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணியை போலீசார் மேற்கொள்ள இருக்கின்றனர்.