jlk

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, 17 வயது சிறுமியை அவரது உறவுக்கார இளைஞர்கள் 3 பேர் கூட்டுப் பாலியல்தொல்லை கொடுத்ததால் சிறுமி விஷம் குடித்து சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் தொல்லையில் ஈடுபட்ட3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில்,செவ்வாய்க் கிழமை இரவு 17 வயது சிறுமியான எனது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் ராஜா (22), மற்றும் கணேசன் மகன் சின்ராஜ் (21), சின்னையா மகன் பிரசாத் (19) ஆகிய 3 பேரும் தூக்கிச் சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தொடர்ந்து தாக்கியதில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்றுபார்த்தபோது 3 பேரும் ஓடிவிட்டனர்.

Advertisment

வீட்டிற்கு வந்த மகள், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். விஷம் குடித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரையும் கீரமங்கலம் போலீசார் கைது செய்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 3 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.