பழ வியாபாரி மீது கொடூர தாக்குதல்; 3 இளைஞர்கள் கைது

 Brutal attack on fruit vendor; 3 youths arrested

மதுரையில் பழ வியாபாரி மீது தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அனுப்பானடியில் சைக்கிளில் வந்த பழவியாபாரி ஒருவர் மது போதையில் இருந்த இளைஞர்கள் மீது தெரியாமல் சைக்கிளை மோதியதாகக் கூறப்படுகிறது. அப்போது மது போதையிலிருந்த அந்த இளைஞர்கள் வியாபாரியை பொது இடத்தில் வைத்து கொடூரமாகத்தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வீடியோவை ஆதாரமாக வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், கார்த்திக் பிரபு, தீபக் ராஜா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

madurai police
இதையும் படியுங்கள்
Subscribe