ADVERTISEMENT

கனிம வள கொள்ளை குறித்து புகார் கொடுத்ததற்கு கொடூர தாக்குதல் - போலீசார் விசாரணை

05:31 PM Dec 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கனிம வள கொள்ளை குறித்து தகவல் அளித்தவரை வீடு புகுந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஏ.மரூர் கிராமத்தில் தொடர்ச்சியாகக் கனிம வளங்கள் கொள்ளை அளிக்கப்படுவது நிகழ்ந்து வருவதாகவும், டிராக்டரில் க்ராவல் மண் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்படுவதாகவும் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்திருந்தார். காவல் நிலையத்திலும், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்தப் புகார் கொடுக்கப்பட்டதற்கு ஏ.மரூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகர் என்பவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட சிலர் சேகரின் வீடு புகுந்து சரமாரியாக அவரைத் தாக்கினர். இதில் சேகர் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வரை செல்ல முறையாக வழக்கு விசாரிக்கப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT