brothers arrested in  trichy  by police 

நீண்ட நாட்களாக தொடர் வழிப்பறி செய்து வந்த அண்ணன் தம்பியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Advertisment

திருச்சி மாவட்டம்,ஸ்ரீபெரம்புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி பரமேஸ்வரி. இவர் கடந்த நவம்பர் 28 ம் தேதி மாலையில் வயலுக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இது குறித்து அவர் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Advertisment

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத்தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று சிறுகனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தஇருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் புள்ளம்பாடி அருகே தெரணிபாளையம் நடுத்தெருவைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான தர்மராஜ் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 6 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள்இருவர் மீதும் திருச்சி - பெரம்பலூர்மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஏற்கனவே குண்டாஸ் வழக்கில்சிறை சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.