Advertisment

தங்கையைக் கேலி செய்தவனைக் கொன்று பழிதீர்த்த அண்ணன்!

murder

Advertisment

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தைச் சேர்ந்த முட்டைக்கண் மாரியப்பன் 4 மாதங்களுக்கு முன் காணாமல் போனான். இதுகுறித்து அவனுடைய சித்தி சீனியம்மாள் தளவாய்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மாரியப்பன் குறித்து காக்கிகள் விசாரித்தபோது, திருப்பூரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவள் வாழ மறுத்துச் சென்றுவிட்டதும், கேரளாவில் இருந்து ஒரு பெண்ணைக் கூட்டிவந்து வாழ்க்கை நடத்திவிட்டு, அவளும் பிரிந்து போனதும் தெரிய வந்திருக்கிறது. திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கும் மாரியப்பனுக்கு, யாருடனும் முன்விரோதம் இருந்ததா என்று விசாரணையை வேறு கோணத்தில் கொண்டு சென்றபோது, ராஜா என்பவனின் தங்கையைக் கேலி செய்து தகராறு நடந்ததை அறிந்திருக்கிறார்கள் காக்கிகள். ராஜாவைத் தூக்கிவந்து விசாரித்தபோது, கூட்டாளிகளோடு சேர்ந்து, முட்டைக்கண் மாரியப்பனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

murder

Advertisment

பிணத்தைச் சாக்குப் பையில் போட்டு, கல்லைக் கட்டி, மீனாட்சிபுரம் தேவியாற்றில் போட்டதாகக் கூறினான். தேவியாற்றில், அழுகிப்போய் 2 மூடை எலும்பு துகள்களாக மாரியப்பனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பெண் விவகாரம் என்றால், உயிரைப் பறித்துவிடுவது வாடிக்கையாகி விட்டது. கொலை செய்வதும் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது

sister police murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe