/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/03_54.jpg)
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியகோமாளி திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய சீமான், “தம்பி பிரதீப் ரங்கநாதன் என்ற ஒருவர் உள்ளார். லவ் டுடே படம் எடுத்தவர் தனது முதல் படத்தை எடுக்கும் போது அவருக்கு 23 வயது. கோமாளி என்ற படத்தை எடுத்தார். நான் பேசியதெல்லாம் அந்த படத்தில் வரும். அருமையாக எடுத்திருந்தார். ஜெயம் ரவி நடித்திருந்தார்.
திரைப்படத்தில் ஒரு காட்சியில் பெரும் மழை பெய்யும். அதில் ஆட்டோவில் கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் போய் சேர்த்து விடுவார். பிரதீப் நடித்த அந்த காட்சியில் ஜெயம் ரவி,ஆட்டோவுக்கு எவ்வளவு கட்டணம் என கேட்கும் பொழுது, “இல்லை எப்பொழுதும் பிரசவத்திற்கு இலவசம் தான்” என்பார். பிரசவத்திற்கு இலவசம் என ஆட்டோவில் எழுதி வைத்துள்ள ஒரே ஆட்கள் எங்கள் ஆட்கள் தான். அதற்கு பெட்ரோல் பணம், தூரம், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு எதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)