Skip to main content

கோபத்தில் தங்கை எடுத்த விபரீத முடிவு; அண்ணனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
 brother lost their life trying to save his younger sister who had jumped into a well

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமன் மகள் சுந்தரி (21). இவர் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்ததால் அவரது குடும்பத்தினர் சுந்தரியை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சுந்தரி வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள பழைய கல் கட்டிய அரசாங்க கிணற்றில் குதித்துள்ளார்.

இதனைப் பார்த்த சுந்தரியின் பெரியப்பா அர்ச்சுனன் மகன் முத்துக்காளை (எ) முத்துக்குமார் (29) தங்கையைக் காப்பாற்ற வேகமாகக் கிணற்றுக்குள் குதித்துவிட்டார். ஏற்கனவே கிணற்றில் குதித்த சுந்தரி ஒரு கல் ஓட்டையைப் பிடித்துக் கொண்டு நின்ற நிலையில், முத்துக்குமார் தண்ணீரில் மூழ்கி ஒரு முறை வெளியே வந்து மீண்டும் மூழ்கியவர் வெளியே வரவில்லை. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் கல்லைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த சுந்தரியை கயிறு மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தவர்கள் தொடர்ந்து முத்துக்குமாரை தேடியும் கிடைக்கவில்லை.

 brother lost their life trying to save his younger sister who had jumped into a well

சம்பவம் குறித்து உறவினர்கள் வடகாடு காவல் நிலையத்திற்கும், ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கியும்,பாதாள கரண்டியை கிணற்றுக்குள் இறக்கி தேடிய நிலையில் முத்துக்குமார் சட்டையில் கோர்த்து சடலமாக மேலே தூக்கப்பட்டார். சடலத்தைக் கைப்பற்றிய வடகாடு போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கையின் உயிரைக் காப்பாற்றப் போய் அண்ணன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதுக்கோட்டையில் ரவுடி சுட்டுக் கொலை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Trichy MGR nagar Durai incident at Pudukottai

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை. ரவுடியான இவர் மீது 70க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லக்கூடிய வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது துரை தான் வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் போலீசார் தற்காப்புக்காக இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக இவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்றவர் ஆவார். மேலும் காவல் ஆய்வாளார் உள்ளிட்ட 5 காவலர்கள் துரை தாக்கியதில் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிறையில் சிக்கிய குட்டி செல்போன்; ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகள் உள்ள சிறையில் செல்போன் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரல் அளவு கொண்ட செல்போனை பொறி வைத்து காவல் துறையினர் பிடித்துள்ளனர். பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1 வது ப்ளாக்கில் படிக்கட்டின் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம் கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர்.

Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

The website encountered an unexpected error. Please try again later.