கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, பட்டத்தால் தம்பதியினர். இவர்களுக்கு முருகேசன், ரவி. வெங்கடேசன், காசிநாதன் ,ஆகிய நான்கு மகன்களும் மகாலட்சுமி என்ற ஒரு மகளும்உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இதில் வெங்கடேசன்(38) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த போது செஞ்சியை சேர்ந்த பிரேமலதா(28) தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் பிரேமலதாவை திருமணம் செய்த வெங்கடேஷ் தனது சொந்த ஊரான கல்லூருக்குஅழைத்து வந்து வசித்து வந்தனர்.வெங்கடேசன் கூலி வேலைக்கு சென்று வருவதும் அவ்வப்போது சென்னைக்கு சென்று வேலை செய்துவிட்டு வருவதும் வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜூன் 10ஆம் தேதி வெங்கடேசன் மனைவி பிரமலதாவுக்கு ஆவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் குழந்தை 8 மாதத்தில் குறை பிரசவத்தால் பிறந்ததால் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி குழந்தை இறந்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வெங்கடேசன் சொந்த ஊரில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த வேலை காரணமாக வெங்கடேசன் மனைவி பிரேமலதாவைவீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்று உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வெங்கடேசனின்வீட்டுக்கு மது போதையில் வந்த அவரது கடைசி தம்பி காசிநாதன் (35) திடீரென்று பிரேமலதாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகம் கழுத்து கை என்ற பத்து இடங்களில் வெட்டி உள்ளார்.இதில் பிரேமலதா கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை பார்த்த காசிநாதன் அங்கிருந்து தப்பி ஓடி ராமநத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிரேமலதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேமலதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயேஇறந்து விட்டதாக கூறியுள்ளனர்.