Advertisment

அண்ணன் கொடுத்த சீதனம்; மண்டபத்தையே கதிகலங்கவைத்த முரட்டுக்காளை

brother gave a jallikattu bull as a gift for his younger sister's wedding

தங்கையின் திருமண நிகழ்ச்சியில், அவர் ஆசைப்பட்ட ஜல்லிக்கட்டுகாளை, சண்டைசேவல், கன்னி நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளைசீதனமாக அளித்த அண்ணனின் செயல் பலரின்கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச்சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி செல்வி. இந்தத்தம்பதிக்குராயல் என்கிற மகனும்விரேஸ்மா என்கிற மகளும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில்சிறுவயது முதலேஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை சேவல் என வளர்ப்புப் பிராணிகளைஅண்ணன் ராயல் பார்த்துப் பார்த்து வளர்த்து வந்தார்.

Advertisment

அந்தப் பிராணிகள் மீது தங்கை விரேஸ்மா அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில்அவர்கள் வளர்த்து வந்த காளை மாடும்சண்டை கிடாவும் திடீரென இறந்துபோயின. இதனால், தங்கை விரேஸ்மா மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். அதே வேளையில், விரேஸ்மாவிற்கு திருமண வேலைகளும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்றுவிரேஸ்மாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, தன்னுடைய தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கைக்குப் பிடித்த ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை கிடாக்கள் போன்றவற்றைசீதனமாக வழங்கியுள்ளார் பாசக்கார அண்ணன் ராயல். இதைச் சற்றும் எதிர்பாராத தங்கை விரேஸ்மா சந்தோஷத்தில் திகைத்துப்போனார்.

அண்ணன், தங்கையின் பாசத்தால்நெகிழ்ந்துபோன உறவினர்கள்உற்சாகத்தில் ஆரவாரம் செய்யத்தொடங்கினர். மேலும், இந்தச் சம்பவம்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

sister brother
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe