Advertisment

காணாமல் போன தங்கை... அண்ணன் செயலால் அதிர்ச்சியான போலீஸார்... அதிர்ச்சி தகவல்! 

சில நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி, தனது அண்ணனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மங்களுரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், முடிப்பு பகுதியை சேர்ந்த ஃபியோனா ஸ்வீடல் குடின்ஹோ என்ற 16 வயது சிறுமியை காணவில்லை எனக் கூறி, அவரது சகோதரர் சாம்சன் (18 வயது) போலீசில் புகார் செய்தார். 2 வாரங்களாக, சிறுமியை காணாத நிலையில், அவர் கடைசியாக மங்களூருக்கு சென்றதாக சொல்லப்பட்டது. பின்னர் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதில் ஃபியோனாவின் அண்ணண் சாம்சன் மீதே போலீஸாருக்கு சந்தேகம் விழுந்தது. சாம்சன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

incident

மேலும் அவர் எப்போதும் பதட்டமாக இருப்பவர் போல் காணப்பட்டதால் போலீஸாருக்கு அதிக சந்தேகம் எழுந்துள்ளது. பின்பு ஃபியானோ அண்ணன் சாம்சனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது தங்கையைக் கொன்று புதைத்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சாம்சனுக்கும் ஃபியானோவுக்கும் வாக்குவாதம் எழ கஞ்சா அடிமையான சாம்சன் சுத்தியலால் தாக்கி தங்கையைக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தை தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதன் பின்பு சாம்சன் அடையாளம் காட்டிய இடத்தில் போலிஸார் தோண்டிய போது அழுகிய நிலையில் பியானோவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்பு பியோனாவின் மொபைல் ஃபோன், பற்கள், தலைமுடி ஆகியவற்றின் மாதிரியை தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

brother complaint incident police sister
இதையும் படியுங்கள்
Subscribe