Published on 20/12/2022 | Edited on 20/12/2022

ஈரோடு மாவட்டம் சாமிக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. 58 வயதான இவர் சமையல் தொழிலும் செய்து வருகிறார். கோவில் பூசாரியான முத்து கோவிலில் பூஜையை முடித்துவிட்டு தனது சகோதரி புஷ்பாவுடன் (49) தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
சாமிக்கவுண்டன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையக் கடக்க முத்து முயன்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த கார் முத்துவின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால் முத்துவும் புஷ்பாவும் தூக்கி வீசப்பட்டு இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் சற்குனம் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.