Advertisment

கழன்று ஓடிய சக்கரம்; சாலை நடுவிலேயே குடைசாய்ந்த பேருந்து

 A broken wheel... a bus leaning in the middle of the road

பயணத்தின் நடுவிலே அரசு பேருந்தின் சக்கரம் கழன்றுஓடிய நிலையில் நடுவழியிலேயே பேருந்து குடை சாய்ந்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்ததபோது திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் ஒன்று கழன்றுகொண்டு சாலையிலேயே ஓடியது. இதனால் பேருந்து குடை சாய்ந்து நடுவழியிலேயே நின்றது. இருப்பினும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

Chennai kanjipuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe