அதிகாலையில் உடைந்த ஏரி; குடியிருப்புகளை சூழ்ந்த நீர்

NN

குன்றத்தூரில் நள்ளிரவில் ஏரி உடைந்ததால் பல வீடுகளை நீர் சூழ்ந்து தேங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு ஏரியில் இன்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது. அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் நிகழ்ந்த ஏரி உடைப்பில் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஏரிகள் அதிகப்படியாக நிரம்பி இருந்தது. இந்தநிலையில், குன்றத்தூரில் ஏற்பட்ட இந்த ஏரி உடைப்பு அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்கிரமிப்பு நபர்களால் ஏரி உடைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident kundrathur Lake weather
இதையும் படியுங்கள்
Subscribe