Advertisment

பேக்கரியின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை; திருச்சியில் துணிகரம்

Broke the lock of the bakery and stole money

திருச்சி தில்லை நகர் 9-வது கிராஸ் பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரில் பிரபல நிறுவனத்தின் பேக்கரி கடை அமைந்துள்ளது. இதன் மேலாளராக பிரேமா இருந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்து கடையைப் பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை 8 மணிக்கு கடையைத்திறக்க வந்த போது கடையின் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ. 43 ஆயிரம் பணத்தை காணவில்லை. கொள்ளையர்கள் கடையின் பூட்டை ஆக்சா பிளேடு வைத்து அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர்.

Advertisment

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சாரநாத் தில்லை நகர் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe