The brisk tree climbing competition ...

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்ளிட்ட சுமார் 50க்கும் அதிகமானகிராமங்களின்பொங்கல் நிகழ்ச்சிகளில் தவறாமல் உள்ள ஒரு போட்டி வழுக்கு மரம் ஏறுதல். கடந்த சில நாட்களாக மேற்பனைக்காடு, கொத்தமங்கம், நெய்வத்தளி உட்பட பல கிராமங்களில் இப்போட்டி நடந்துள்ளது.

Advertisment

நேற்று (17/01/2021) மாலை வடகாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான வழுக்குமரம் ஏறும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வடகாடு ஊராட்சி பரமநகரில் 24-வது ஆண்டாக பிரண்ட்ஸ் கிளப் எனும் அமைப்பு சார்பில் வழுக்குமரம் ஏறும் போட்டி ஜன.17ஆம் தேதி நடைபெற்றது.

Advertisment

இதில், 44 அடி உயரம் உள்ள மரத்தில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்துவதற்காக 20 கிலோ கிரீஸ் தடவப்பட்டது. மேலும், அதன் மீது சுமார் 5 லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டது.

போட்டியை அ.தி.மு.க. மாணவர் அணி மாவட்டத் தலைவர் ஏ.வி.ராஜபாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த வழுக்குமரம் ஏறும் போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு சுற்றுகளாக சுமார் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வடகாடு, மாங்காடு ஏவி பேரவை அணியினர், ஒருவரின் மீது ஒருவராக 9 பேர் ஏறி மரத்தின் இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனர்.

The brisk tree climbing competition ...

இவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் உமா மகேஸ்வரி தங்கவேல் ரூ.24,000 ரொக்கப் பரிசு வழங்கினார்,நினைவு பரிவும் வழங்கப்பட்டது.