Bridges closed by curfew reopen in Chennai...

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுதல் (07.06.2021) சில செயல்பாடுகளுக்குத் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால் சென்னையில் வாகன போக்குவரத்து முன்பைவிட அதிகரித்திருக்கிறது. வழக்கமான செயல்பாடுகள் போன்று சென்னையில் வாகன போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.

Advertisment

இதன் காரணமாகஆஃப்லைனில் இருந்த போக்குவரத்து சிக்னல்கள் தற்போது செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இருசக்கர வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கமாக செல்கின்றன. வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சென்னை நகரில் மூடப்பட்டிருந்த பாலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. திருமங்கலம், வடபழனி, தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மேம்பாலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

Advertisment