Advertisment

காவிரி பாலம் புனரமைப்பு பணி; தடுப்பை மீறும் வாகன ஓட்டிகள்

Bridge maintenance work Trichy has caused difficulties motorists

திருச்சி காவிரி பாலமானது பராமரிப்பு பணிக்காக நேற்று அதிகாலை முதல் மூடப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு 2 மீட்டர் அகலத்தில் இடைவெளி விடுத்து பேரிகார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இதில் எதிரும் புதிருமாக இருசக்கர வாகனங்கள் முட்டிக்கொண்டு நிற்கின்றன. மேலும் ஒருபுறம் கயிறு மட்டுமே இருப்பதனால் அதனைத்தாண்டி இருசக்கர வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் இருசக்கர ஹாண்டில் பார், கண்ணாடிகள் மாட்டிக்கொண்டு இழுத்துச் செல்லப்படுவதால் பேரி கார்டுகள் கீழே விழுகிறது.

Advertisment

எனவே கயிறை அகற்றி விட்டு பேரிகார்டு அமைப்பது சிறந்தது என்றும், மேலும் 2 மீட்டர் அகலத்தை 4 மீட்டராக மாற்றினால் இருசக்கர வாகன நெரிசல் தவிர்க்கப்படும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

people trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe