வெள்ளாற்றில் மழை வெள்ளத்தால் தரைப்பாலம் உடைப்பு....

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் பயன்பாட்டுச் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் உடைந்தது. இதனால் 30க்கும் மேற்ப்பட கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

bridge broken

கோட்டைக்காடு பெண்ணாடம் வெள்ளாற்றில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் வேலை சுமார் ரூ. 11 கோடியில் நடைபெற்று வருகிறது. 13 பில்லர்கள் போடவேண்டிய நிலையில் 11 பில்லர்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இன்னும் 3 பில்லர்கள் போடவேண்டிய நிலையில் உள்ளது. இந்த வேலை ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வரும் 2020 ஆண்டு பொங்கலுக்கு கூட பயன்பாட்டுக்கு வராதோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் அருகில் தெத்தேரி சம்பேரி வெள்ளாற்றில் சுமார் ரூ. 33 கோடியில் கட்டப்பட்டுவரும் தடுப்பணையை கட்டுவதர்கக்கு ஆர்வம் காட்டும் அரசு மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பாலத்தை கட்டுவதில் தாமதம் காட்டிவருவது மிகவும் வருந்தத்தக்கது.

bridge broken

அரசும் அதிகாரிகளும் இந்த உயர்மட்ட மேம்பாலத்தை துரிதமாக கட்டிமுடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டுமென இரு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள 50 கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Ariyalur Bridge Cuddalore flood
இதையும் படியுங்கள்
Subscribe