திருமணமான அன்றே மணமகன் மரணம்; காவல்துறை விசாரணை

The bridegroom passed away on the day of marriage; Police investigation

திண்டிவனம் கோட்டக்குப்பம் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்றே இளைஞர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் புதுச்சேரியை ஒட்டிய கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணிற்கும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் புதுச்சேரியில் நேற்று காலை நடந்தது. கோட்டக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலைவரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்யாண வீட்டார் அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் உடை மாற்றும் அறைக்கு உடைகளை மாற்ற சுரேஷ்குமார் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சுரேஷ்குமார் வெளியே வராததால் உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது தரையில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான அன்றே மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

puthuchery
இதையும் படியுங்கள்
Subscribe