/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_403.jpg)
செங்கல்பட்டு மாவட்டம்திருப்போரூரைச் சேர்ந்த இளைஞருக்கும்மேலகோட்டையூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் பாதியிலேயே நின்றது.
திருமணத்திற்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்வின் போது மணமேடைக்கு வந்த மணமகன், குடித்திருந்ததாகவும்அதோடல்லாமல்பெண் வீட்டாரிடம் தகராற்றில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து பெண் வீட்டார் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், தான் செய்தது தவறு என்று கூறி பெண் வீட்டார் உள்பட அங்கிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் மணமகன். ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த மணப்பெண், திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவு,நகைகள் உள்ளிட்டவற்றைதிரும்பகொடுக்குமாறு கேட்டுள்ளார். மணமகன் குடித்திருந்ததால் திருமணத்தையே நிறுத்திய மணமகளின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)