/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1584.jpg)
சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் நிரஞ்சனாதேவி (21),அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் பொறியாளர் மாரியப்பன் (22)இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இருதரப்பிலும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல், நேற்று (19.08.2021) சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பின் இருவரும் சமயபுரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.இதைத்தொடர்ந்து சமயபுரம் காவல் நிலையத்திலிருந்து இருவரதுபெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காவல் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அதனையடுத்து, மணமகனின் பெற்றோர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு மணமக்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)