காட்டுமன்னார் கோயில் அருகே லால்பேட்டை மின்துறை அலுவலகத்தில் வணிக உதவியாளராக குருநாதன் பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த தமிழினியன் என்பவரது வணிக கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மின்துறை அலுவலரிடம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் கடலூர் மாவட்ட லஞ்சஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். லஞ்சஒழிப்பு துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தமிழினியன் வெள்ளியன்று குருநாதனிடம் நைசாக பேசி ரூபாய் ஜந்து ஆயிரம் லஞ்சத்தை கொடுத்துள்ளார். அப்போது மின்துறை அலுவலகத்தின் அருகே பதுங்கி இருந்த லஞ்சஒழிப்பு துறை காவலர்கள் குருநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.