ADVERTISEMENT

முத்திரைதாள் துணை ஆட்சியரை மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை; 50 லட்சம் சிக்கியது!

04:37 PM Feb 29, 2020 | kalaimohan

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்களம் அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். முருகன் மற்றும் அவரது உறவினரான ராஜவேலு இருவரும் தங்களது பெயர்களில் இருந்த 1.47 ஏக்கர் நிலத்தினை முருகன் மகன் 31 வயதான ரஞ்சித்குமார் பெயரில் விற்பனை பத்திரம் மூலம் எழுதி வைத்துள்ளனர்.

இந்த பத்திரப்பதிவு கண்ணமங்களம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது. பத்திரப்பதிவு அலுவலர், குறைவான கட்டணத்துக்கு பத்திர கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது எனச்சொல்லி, முத்திரை கட்டணம் குறைவாக செலுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இதுக்குறித்த தகவலை கடிதமாக முத்திரைத்தாள் கட்டண துணை ஆட்சியர்க்கு அனுப்பிவைத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூரில் உள்ள பத்திரப்பதிவு துணைஆட்சியர் தினகரன், இதுதொடர்பாக ரஞ்சித்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு வரவைத்து விசாரணை நடத்தியுள்ளார். இதனை உங்களுக்கு சாதகமாக முடித்து தருகிறேன் எனச்சொல்லி 1 லட்சம் ரூபாய் ரேட் பேசி இறுதியில் 75 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் எனக்கேட்டுள்ளார். அவ்வளவு பணம் முடியாது எனச்சொல்லி ரஞ்சித்குமார் தாமதம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித்குமாரை தொடர்பு கொண்ட தினகரனின் அலுவலக கார் ஓட்டுநர் ரமேஷ், 50 ஆயிரம் கொண்டு வாங்க, விவகாரத்தை முடித்துக்கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார்.

அதற்கு ஒப்புக்கொண்டது போல் சரியென தலையாட்டிய ரஞ்சித்குமார், இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்தார். அவர்கள் தந்த ரசாயனம் தடவிய நோட்டுக்களை வாங்கிக்கொண்ட ரஞ்சித்குமார், பணம் ரெடி எங்கு வரட்டும் எனக்கேட்டுள்ளார். கலெக்டர் அலுவலகம் வெளியே உள்ள ஏ.டி.எம் அறை முன்பாக நிற்க சொல்லி தகவல் சொல்லியுள்ளார். அதேபோல் ரஞ்சித்குமார் நின்றுக்கொண்டு இருந்துள்ளார்.

இரவு 8 மணியளவில் அரசுக்காரில் வந்த அதிகாரி தினரகன், ரஞ்சித்தை தனது காரில் ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். பின்னாடியே சென்று காரை மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அதிகாரி தினகரனிடம்மிருந்து ரசாயனம் தடவிய 50 ஆயிரம் உட்பட 2.44 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளார்.


பிப்ரவரி 29ந்தேதி காலை தினகரனை காட்பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் 50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரியின் பணம் வாங்கி தரும் புரோக்கராக செயல்பட்ட கார் ஓட்டுநர் ரமேஷ்குமாரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு அலுவலராக கடந்த ஜனவரி மாதம் இறுதியில் மாற்றப்பட்டுள்ளார் தினகரன். அங்கு சென்று பதவி ஏற்றுக்கொள்ளாமல் முத்திரைக்கட்டண துணை ஆட்சியராகவே பணியை தொடர்ந்து வந்தவர், தனது இடமாற்றத்தை ரத்து செய்வதற்கான வேலைகளிலும் ஈடுப்பட்டு வந்துள்ளார். அது முடியாமல் இழுத்ததால், பென்டிங் பைல்களை முடித்து பணம் பார்த்துவிட்டு புதிய இடத்தில் பணியை தொடரலாம் என்றே வசூல் வேட்டையில் தீவிரம் காட்ட தற்போது சிக்கிக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT