லஞ்சம் தந்து கடன் பெற்ற வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அதிமுக எம்.பி. ராமச்சந்திரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் தற்பொழுது அவருக்கு7 ஆண்டுகள்சிறைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

'சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் கல்லூரி விரிவாக்கத்துக்கு கடன் பெற லஞ்சம் தந்ததாக அதிமுக முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரன்,வங்கி மேலாளர் தியாகராஜன், ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Advertisment

 Bribery debt: Former AIADMK MP jailed for 7 years

இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் உள்பட மூன்று பேரும் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மூன்று பேருக்கான தண்டனை விவரத்தை பிற்பகல் 03.00 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி ரமேஷ் தெரிவித்திருந்த நிலையில்தற்பொழுது இந்த வழக்கில்முன்னாள் எம்.பிகே.என்.ராமச்சந்திரனுக்கு7 ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினராககே.என்.ராமச்சந்திரன் 2014 முதல் 2019 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment