
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் சரவணனை கைது செய்துள்ளனர். கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பட்டா மாறுதலுக்காகச்சென்ற நிலையில் அவரிடம் துணை வட்டாட்சியரான சரவணன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சுரேஷ் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகத்துணை வட்டாட்சியர் சரவணனை கைது செய்தனர். மேலும் இதில் இடைத்தரகராகச் செயல்பட்ட சாம்பசிவம் என்பவரையும் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us