பத்திரப்பதிவு செய்ய வந்த நபரிடம் பாத்ரூமில் வைத்து சார் பதிவாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் என்பவர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வந்த நபரிடம் பாத்ரூமில் வைத்து லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் லஞ்சம் வாங்கிய ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குலோத்தமன் உத்தரவிட்டுள்ளார்.