p

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் டவுன் பஞ்சாயத்த்தில் உதவி பொறியாளராக இருந்தவர்வர் வனிதா. இவர் உத்தமபாளயத்திற்கு உட்பட்ட மல்லிங்காபுரம் பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக டி.மேட்டுப்பட்டியை சேர்ந்த ஒப்பந்ததாரர் கோவிந்தராஜிடம் பணி முடிவடைந்ததற்கான சான்றிதழ் வழங்குவதற்காக 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு பேரம் பேசப்பட்டு அதில் 12 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கு தேனி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ உதவி பொறியாளர் வனிதாவுக்கு 2 வருட சிறை தண்டனையும் 2 ஆயிரம் அபதாரமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.