இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகடிடிவி தினகரன் மீதானபுகாரிலான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகடிடிவி தினகரன்மீது குற்றச்சாட்டு எழுந்து டெல்லி காவல்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்ஜாமின் பெற்று வெளியேவந்தார் டிடிவி. அந்த வழக்கில்டெல்லி காவல்துறை தினகரன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அதனையடுத்து இந்த வழக்கில் மனுதாக்கல் செய்யப்பட்டு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை பெற்றிருந்தனர். இந்நிலையில் டிடிவி தினகரன் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையை நீடிக்க வேண்டும் எனடெல்லி உயர்நீதிமன்றத்தில்புதியதாக மனுதாக்கல் செய்திருந்தார்.
இன்று நடந்த அந்த மனுமீதான விசாரணையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடையைவரும் 20 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பாட்டியாலாநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.