1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: பள்ளி முதல்வர் கைது!

skol princi

1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சென்னை அசோக் நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாய மாணவர்கள் கல்வி சேர்க்கை திட்டத்தின் அடிப்படையில், தலித் மாணவனின் பெற்றோர் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அந்த கோட்டாவின் அடிப்படையில் அந்த பெற்றோரிடம் பள்ளி முதல்வர் ஆனந்தன் ரூ.1 லட்சம் கேட்டுள்ளார்.

இதில், அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோர் சிபிஐ-யிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் பள்ளி முதல்வர் ரூ.1லட்சம் லஞ்சம் பெறும் போது கையும், களவுமாக சிபிஐ அதிகாரிகள் ஆனந்தனை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆனந்தனை சென்னை சாஸ்த்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Subscribe