Advertisment

சிதம்பரத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 Breastfeeding awareness program in Chidambaram

Advertisment

சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் தாய்ப்பால் வார விழா வீனஸ் பள்ளி நிர்வாகம் மற்றும் சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் கலந்து கொண்டு தாய்ப்பால் அருந்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடம் விளக்கிப் பேசினார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் வளர்ப்பு குறித்த மலரை வெளியிட்டார். பின்னர் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் மாணவிகளுக்கு கேடயம், சான்றுகளை வழங்கிப் பாராட்டினார்.

இதில் குழந்தைகள் நல மருத்துவர் சிவப்பிரகாசம், பெண்கள் குடும்ப நல மருத்துவர் பத்மினி, இன்னர் வீல் சங்கத்தின் தலைவர், பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் மாணவிகள் மருத்துவர் பத்மினியிடம்பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.

awarness
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe