Advertisment

வெளிச்சத்திற்கு வந்த தாய்ப்பால் விற்பனை; 18 குழுக்கள் அமைப்பு

Breast milk sales exposed; 18 groups system

பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை அடைத்து சட்டவிரோதமாக விற்பனை நடத்தியதாக வெளியான சம்பவம் சென்னை மாதவரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தாய்ப்பால் விற்பனை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை மாவட்டத்தில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை மாதவரம் பகுதியில் தாய்ப்பாலை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து சட்டவிரோதமாக ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தகவல் அடிப்படையில் தாய்ப்பால் விற்பனை மையங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

தாய்ப்பாலை விற்பது சட்டப்படி குற்றம் என்பதால் வேறு சத்துணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிகோரி அனுமதி வாங்கிவிட்டு அதற்கான லைசென்ஸை வைத்து சட்டவிரோதமாக தாய்ப்பால்விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்ப்பால் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

milk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe