கடலூரில் பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் கல்லாப் பெட்டியிலிருந்த பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வெகு நேரமாக சாலையில் காத்திருந்த நபர் ஒருவர் மக்கள் நடமாட்டம் குறைந்த பிறகு சாலை ஓரத்திலிருந்த பழைய இரும்பு கடைக்குச் சென்று கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியிலிருந்த 25 ரூபாய் உட்பட பல்வேறு பொருட்களை அங்கிருந்து திருடிச் சென்றார். அடுத்தநாள் காலை கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை பார்த்தபொழுது திருட்டு நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.