Skip to main content

என்.எல்.சி அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

 

Breaking the lock of the NLC officer's house and stealing jewelry!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர், குறிஞ்சிப்பூ தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். என்.எல்.சியில் முதன்மை தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது 2 பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின்பு தனது மனைவியுடன் இவ்வீட்டில் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் தனது மனைவியின் இருதய அறுவை சிகிச்சைக்காக கடந்த 10-ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இன்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துணிமணிகள் சிதறிக் கிடப்பதையும், பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாசலம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Breaking the lock of the NLC officer's house and stealing jewelry!

 

முதற்கட்ட விசாரணையில், திருடர்கள் வீட்டின் பின்பக்க மாடியின் அருகே உள்ள மரத்தின் வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 22 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, திருடர்களைத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்