Advertisment

அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு- கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்

Breaking the glass of the government bus

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து கண்ணன்தாங்கல் கிராமப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்தில் சுப்பிரமணியன் (ஓட்டுநர்) சாரங்கன் (நடத்துநர்) இருந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட பெண் பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது 3 இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் ஒலி எழுப்பிக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனுக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகின்ற நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து அரசு பேருந்து முகப்பு கண்ணாடியை உடைத்தனர். இதனால் பேருந்திலிருந்தபெண் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். பரபரப்பாக இருந்த சாலையில் திடீரென அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

kanjipuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe