திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(70). இவர் பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அத்தகவலின் பேரில் அங்கு வந்த உறையூர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர்.