திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு(58). இவர் கடந்த 8ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் காலை 5.30 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுக்குறித்து உப்பிலியபுரம் காவல்நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பெரியமணி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களுடன் மாதிரிகளை சேகரித்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து கொள்ளை!
Advertisment