Advertisment

காமராஜர் பிறந்தநாளில் மரம் நடும் விழாவில் பிரேசில் நாட்டு பள்ளி மாணவர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே கணவாய்ப்பட்டி பஸ்ட் ஸ்டெப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கயல்விழி வரவேற்றார்.

Advertisment

kamarajar birthday

விழாவில் பஸ்ட் ஸ்டெப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிப்பதற்காகவும், இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரங்களை கற்றுக் கொள்வதற்காகவும் பிரேசில் நாட்டில் இருந்து இந்தியா வந்திருக்கும் பள்ளி மாணவன் இன்சோசௌசோ மரக்கன்றுகளை நட்டு வைத்தான்.

kamarajar birthday

Advertisment

பிரேசில் நாட்டு பள்ளி மாணவனோடு இணைந்து பஸ்ட் ஸ்டெப் பள்ளி மாணவர்களும் 117 மரக்கன்றுகளை கணவாய்ப்பட்டி, கெங்குவார்பட்டி சாலையில் நட்டு வைத்தனர். பிரேசில் நாட்டு பள்ளி மாணவனின் இன்சோ சௌசோ காமராஜரின் கல்வி சேவையையும், அவரின் வாழ்க்கை வரலாற்றை குறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினான். மரக்கன்று நடும் விழாவின் போது இந்திய தேசிய கொடியோடு பிரேசில் நாட்டு கொடியையும் மாணவர்கள் கையில் ஏந்திப் பிடித்து இருந்தனர். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாதவன், காசி, சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரியா நன்றி கூறினார்.

function kamarajar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe