
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி முடித்த பிறகு அந்தியூரை சேர்ந்த நபர் ஒருவர் அதிமுக சார்ந்த கூட்டங்களும் தங்களுக்கு அழைப்பு வருவதில்லை என தெரிவித்தார்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மேடைக்கு சென்ற அந்த நபர் மீண்டும் 'அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டத்திலும் தமக்கு அழைப்பு விடுவதில்லை' என கருத்தை முன் வைத்தார். அப்பொழுது அதிமுகவினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சேர்களை தூக்கி வீசி அடித்து துரத்தினர். சமபந்தப்பட்ட நபரை துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.