சக பயணிகளின் துணிச்சல்; மீட்கப்பட்ட பெண்ணின் தங்க செயின்     

The bravery of fellow travelers! The gold chain of the rescued woman!

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி செல்வி(53) என்பவர் தனது உறவினரை சந்திக்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேருந்தில் பாண்டூர் கிராமத்திற்கு வந்துகொண்டிருந்தார். அவருடன் அவரது உறவினர்கள் கல்யாணி, அன்னபூரணி உட்பட ஐந்து பேரும் பயணித்தனர்.

இந்நிலையில் பேருந்தில்சென்றுகொண்டிருந்த போது திடீரென்று செல்வி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயினை அதே பேருந்தில் அவர்களுடன் பயணித்த இரண்டு பெண்கள் பறித்துக்கொண்டு, பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். அப்போது செல்வி கூச்சலிட்டு தனது தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடுவதாக சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு பேருந்தில் இருந்த சிலர் செயினை பறித்துக் கொண்டு ஓடிய இரண்டு பெண்களையும் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிறகு அவர்கள் இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் முரண்பாடான பதில் கூறியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் திருச்சி கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தஉமா மற்றும் ராஜேந்திரன் மனைவிசெல்வி என்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe