Brave and efficient politician' - Tamimun Ansari mourns Vetrivel's death

Advertisment

சென்னையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.

அவரின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் கரோனா தொற்று கிசிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். சட்டமன்றத்தில் எங்களோடு துடிப்பாக செயல்பட்ட அவர், அரசியல் மாற்றங்களில் தனது பதவியை இழந்து எங்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனார். ஒரு முறை சட்டமன்றத்தில் அவருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது நான் எழுந்து சென்று, இரு தரப்புக்கு இடையே மோதல் நிகழாத வண்ணம் நிலைமையை சீராக்கினேன்.

Advertisment

அந்த நிகழ்வுக்கு பிறகு அவர் நெருங்கிய நண்பரானார். அவர் அமமுகவின் பொருளாளராக பணியேற்று அக்கட்சியின் வளர்ச்சியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார். துணிச்சல் மற்றும் செயல்திறன் மிக்க அரசியல்வாதியாக அறியப்பட்டார்.

தற்போது கரோனா தொற்று காரணமாக அவர் பெற்று வந்த கிசிச்சை பலனின்றி, இறந்திருப்பது துயரத்திற்குரியதாகும். நீண்ட காலம் அரசியலில் பணியாற்றிட வேண்டியவரின் பயணத்தில் கரோனா நோய் முற்றுப்புள்ளியாய் விழுந்தது வருத்தமளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,TTV. தினகரன் உள்ளிட்ட அமமுக வினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் எனக்கூறியுள்ளார்.