BR Pandian asked for support from Edappadi!

Advertisment

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விவசாயச் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், ''ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எல்லாம் திறந்து வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவதற்கு கார்ப்ரேட்களையும், ஓஎன்ஜிசியையும் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பலமுறை முதல்வருக்கு எடுத்துச் சொல்லியும் நான் பேராபத்து மிகுந்த கிணறுகளை மூட உத்தரவிட்டிருக்கிறேன் என்று கூறுகிறாரே தவிர, மாவட்ட அதிகாரிகள் ஏதோ ஒரு அரசியல் அழுத்தம் காரணமாக முதல்வரின் உத்தரவையே மீறி அதனை செயல்படுத்த முயல்கிறார்கள். இதனைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மன்னார் குடியில் நடத்துகிறோம்.அதற்கு ஆதரவு கேட்டு அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளோம். அவரும் அதற்கு ஆதரவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்'' என்றார்.