Skip to main content

ஊதுபத்தியை மறந்து வைத்த சிறுவர்கள்; வீடே எரிந்து விபத்து

Published on 31/10/2024 | Edited on 31/10/2024
Boys who forgot their blow-dryers; Home fire accident

திண்டுக்கல்லில் சிறுவர்களின் அலட்சியத்தால் ஊதுபத்தியில் இருந்து தீ பரவி பட்டாசுகள் வெடித்து வீடே பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பட்டாசுகளை வாங்கி வந்த மணிகண்டன் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் பட்டாசுகளை வைத்திருந்தார். இந்நிலையில் மணிகண்டனின் மகன்கள் பட்டாசு இருக்கும் அறைக்கு சென்று பட்டாசுகளை எடுத்து வெடித்துள்ளனர்.

பின்னர் பட்டாசு தீர்ந்துவிட்டதால் மீண்டும் பட்டாசு வைத்திருந்த அறைக்கு சென்ற சிறுவர்கள் பட்டாசு வெடிக்கப் பயன்படுத்திய ஊதுபத்தியை அந்த அறையில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டனர். இந்நிலையில் ஊதுபத்தியில் இருந்த தீயானது பரவி பட்டாசு வெடித்து சிதறியது. உடனடியாக தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனினும் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.