/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died-1_29.jpg)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சக்கராபுரம். இந்த ஊரைச் சேர்ந்த சேக் முகமது மகன் பதிமூன்று வயது சல்மான். இவர் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் என்பவரது மகன் ரகுமான் ஒன்பது வயது. இவரும் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இரு நண்பர்களும் நேற்று சக்கராபுரம் அருகில் உள்ள பொன்பத்தி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
இரு சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியாது. ஆர்வமிகுதியால் கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது ஒருவர் பின் ஒருவராக நீச்சல் தெரியாததால் கிணற்று நீரில் உயிருக்கு போராடி கத்தி சத்தம் போட்டுள்ளனர். அக்கம்பக்கம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிணற்றுக்கு சென்று பார்த்துள்ளனர். தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட பொதுமக்கள் செஞ்சி தீயணைப்புத் துறைக்குத்தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிறுவர்கள் மூழ்கிய கிணற்றில் இருந்து சிறுவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களை உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரு சிறுவர்களும் இறந்து விட்டதாகத்தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)